தொங்கும் கோயில்
தொங்கும் கோயில் | |
---|---|
தொங்கு கோயில் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | ஹுன்யான் கவுண்டி, ததோங் நகரம், சான்சி மாகாணம், சீனா |
புவியியல் ஆள்கூறுகள் | 39°39′57″N 113°42′18″E / 39.66583°N 113.70500°E |
சமயம் | பௌத்தம் |
தொங்கும் கோயில் (Hanging Temple, also Hengshan Hanging Temple, Hanging Monastery or Xuankong Temple), சீனாவின் வடகிழக்கில் உள்ள சான்சி மாகாணத்தின் ஹுன்யான் கவுண்டியில் உள்ள ததோங் நகரத்திற்கு 64 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பௌத்த விகாரை ஆகும். இக்கோயில் ஹெங் மலையுச்சியில் 75 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் தொங்கும் நிலையில் சீனக் கட்டிடக் கலை நயத்தில் கிபி 6-ஆம் நூற்றாண்டில் மரத்தால் 40 மண்டபங்களுடன் கட்டப்பட்டது. இது ஒரு ஆன்மீக, வரலாற்றுச் சுற்றுலாத்தலமாகவும் உள்ளது. இக்கோயில் பௌத்தம், தாவோயியம் மற்றும் கன்பூசியம் ஆகிய மூன்று சமயப் பிரிவினருக்கும் பொதுவானதாகும்.
பௌத்தம், தாவோயியம் மற்றும் கன்பூசியம் ஆகிய மூன்று சமயப் பிரிவினர்களுக்கான மண்டபத்தில், ஆன்மீகத் தலைவர்களான கௌதம புத்தர் (நடுவில்), லாவோ சீ (இடது) மற்றும் கன்பூசியஸ் (வலது) சிலைகள் நிறுவப்பட்டுள்ளது.
படக்காட்சியகம்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Hanging Temple, Class II Protected Sites in China, from ChinaCulture.org. Retrieved d.d. January 1, 2010.
- History of the Hanging Monastery
- Geo Architecture and Landscape in China's geographic and Historic Context (2016). Book by Fang Wang. Page 102-112.